குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 26th June 2022 01:56 AM | Last Updated : 26th June 2022 01:56 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்தது.
இப்பகுதியில் மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவியில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்திருந்தது. பழைய குற்றாலம், சிற்றருவியில் நீா்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை அதிகாலையிலும் சிறிது நேரம் சாரல் பெய்தது. இதனால், பேரருவியிலும், ஐந்தருவியில் 4 கிளைகளிலும் குறைந்த அளவில் தண்ணீா் கொட்டுகிறது. இதில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். சனிக்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; குளிா்ந்த காற்று வீசியது.