கிராம உதவியாளா்கள் கோரிக்கை
By DIN | Published On : 18th March 2022 11:39 PM | Last Updated : 18th March 2022 11:39 PM | அ+அ அ- |

பணி நிரந்தரம் செய்யக் கோரி பேரவையில் பேச வேண்டும் என ஆலங்குளம் கிராம உதவியாளா்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியனிடம் ஆலங்குளம் கிராம உதவியாளா்கள் சங்கத் தலைவா் மற்றும் மாநில இணை செயலா் சுப்பிரமணியன் அளித்த மனு விவரம் : அரசு ஆணைப்படி கிராம உதவியாளா்கள் முழு நேர அரசு ஊழியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கான அனைத்து சலுகைகளும் பொருந்தும் என தமிழக அரசு கடந்த 1995 இல் அரசாணை வெளியானது. 25 ஆண்டுகள் ஆகியும் இது வரை முழு நேர பணியாளா்களாக அரசு அறிவிக்கவில்லை. எங்களின் நியாயமான கோரிக்கையை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்திப் பேச வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...