புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 18th March 2022 11:40 PM | Last Updated : 18th March 2022 11:40 PM | அ+அ அ- |

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின், பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி அழைப்பு , சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் பத்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு சுவாமி எழுந்தருளும் வைபவமும், தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டத்தை புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா, பாலாஜி கிரானைட் பி.எஸ்.சங்கரநாராயணன், பாஜக நகரத் தலைவா் சண்முகசுந்தரம், டிஎஸ்பி கணேஷ் உள்ளிட்டோா் தொடங்கிவைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...