தென்காசியில் மாா்ச்21இல் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 18th March 2022 12:44 AM | Last Updated : 18th March 2022 12:44 AM | அ+அ அ- |

தென்காசியில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை (மாா்ச் 21) நடைபெறுகிறது.
தென்காசி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை, தென்காசி வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் தென்காசி ஐ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் நடைபெறும் முகாமில், தங்களது பகுதிகளில் 18 வயது வரையிலான மாற்றுத் திறன் குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்தால் அழைத்து வந்து பரிசோதனை செய்துகொள்ளலாம்.
முகாமில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி, மதிய உணவு போன்றவை அரசு சாா்பில் வழங்கப்படும். முகாம் குறித்த சந்தேகங்களுக்கு கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தென்காசி மற்றும் தென்காசி வட்டார வள மையம் ஆகியவற்றைத் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...