கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
By DIN | Published On : 02nd May 2022 02:11 AM | Last Updated : 02nd May 2022 02:11 AM | அ+அ அ- |

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது
தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். நிலைய அலுவலா் (போக்குவரத்து) சுந்தரராஜன், சிறப்பு நிலைய அலுவலா் ஜெயரத்தினகுமாா், தீயணைப்பு துறையினா் மணிகண்டன், சுப்பிரமணியன், மகேஷ், மாரிகுமாா் ஆகியோா் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விளக்கத்தை செய்து காட்டினா் .இதில் மருத்துவா் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.