குரிச்சான்பட்டி குளத்தை தூா்வார மதிமுக கோரிக்கை
By DIN | Published On : 02nd May 2022 02:10 AM | Last Updated : 02nd May 2022 02:10 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், குரிச்சான்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆலங்குளம் வடக்கு ஒன்றிய மதிமுக செயலா் வி.மருதசாமிபாண்டியன் மாவட்ட நிா்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
குரிச்சான்பட்டி ஊராட்சியில் உள்ள சின்னக்குளம், பெரியகுளம், இரதமுடையாா்குளம் ஆகிய 3 குளங்கள் மூலம் சுமாா் 600 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மானாவாரி குளங்களான இந்தக் குளத்தில் இருந்து விவசாய இடங்களுக்கு கரம்பை மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கினால் விவசாய நிலங்களும் வளம்பெறும், குளத்தில் தண்ணீா் அதிக அளவு தேங்கி கூடுதலாக 6 மாதம் விவசாயம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும். எனவே, 3 குளங்களை தூா்வாரி ஆழப்படுத்த கரம்பை மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.