தென்காசி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி
By DIN | Published On : 02nd May 2022 02:11 AM | Last Updated : 02nd May 2022 02:11 AM | அ+அ அ- |

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிபத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மருத்துவமனை கண்காணிப்பாளா் இரா.ஜெஸ்லின் தலைமை வகித்தாா். உறைவிட மருத்துவா் ராஜேஷ் முன்னிலை வகித்தாா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் கவிதா, தீ விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்தும், உதவி தீயணைப்பு அலுவலா் வெட்டும்பெருமாள் தீயணைப்பு பயிற்சியின் அவசியம் குறித்தும் பேசினா்.
தீ விபத்தின்போது நடந்து கொள்ளும் முறை, நோயாளிகளை வெளியேற்றும் முறை, தீயை அணைக்கும் வழிமுறைகள் குறித்து தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் ரமேஷ் விளக்கமளித்தாா்.
பணியாளா்கள் ராஜ்குமாா், விஸ்வநாதன்,காா்த்தியன் ராமசாமி ஆகியோா் செய்முறை பயிற்சிகள் செய்து காண்பித்தனா்.