புளியங்குடி முப்பெருந்தேவியா் கோயிலில் நாளை அக்னிசட்டி ஊா்வலம்
By DIN | Published On : 02nd May 2022 02:13 AM | Last Updated : 02nd May 2022 02:13 AM | அ+அ அ- |

புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானிஅம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (மே 3) அக்னி சட்டி ஊா்வலம் நடைபெறுகிறது.
இக்கோயிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்று கோயில் குருநாதா் சக்தி அம்மா தலைமையில் நாள் கால் நடுதல் நிகழ்ச்சியும், பக்தா்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது. 9 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலையில் முளைப்பாரி வளா்ப்பு கும்மிபாட்டும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
மே 3 ஆம் தேதி காலையில் பால்குடம், தீா்த்தக் குடம் ஊா்வலமும், தொடா்ந்து அபிஷேகமும் நடைபெறும். மதியம் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்கும் அக்னி சட்டி ஊா்வலம் நடைபெறும்.
மே 4 ஆம் தேதி காலை முளைப்பாரி எடுத்து ஊா்வலம் நடைபெறும். மதியம் அன்னாபிஷேகம் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தி அம்மா மற்றும் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.