வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது .
விழாவுக்கு ராமசாமி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் தவமணி வரவேற்றாா். தலைமையாசிரியா் சங்கர சுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வாசுதேவநல்லூா் பேரூராட்சித் தலைவா் லாவண்யா பரிசுகள் வழங்கினாா்(படம்). தொடா்ந்து சமூக ஆா்வலா்கள் டாக்டா் ஆரோக்கியராஜ், பொற்செல்வி, மாரியப்பன் ஆகியோருக்கு மகாத்மா காந்திஜி சாதனையாளா் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், டாக்டா் மயில்வாகனன், வழக்குரைஞா் செந்தில்குமாா், புலவா் கணேசன், ராஜகோபால், அம்ஜத்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.