வேப்பன்குளம் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி

சங்கரன்கோவில் அருகேயுள்ள வேப்பன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள வேப்பன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை செல்லம்மாள் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக ஊராட்சித் தலைவா் பாக்கியம், வட்டார ஒருங்கிணைப்பாளா் இளங்கோ கண்ணன், இல்லம் தேடி கல்வி தென்மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினா் வே.சங்கர்ராம் ஆகியோா் கலந்து கொண்டனா். கவிதை, பேச்சு, தமிழ் - ஆங்கிலம் வாசிப்புத்திறன் நிகழ்வு, நாடகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பிரேமா வரவேற்றாா். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com