ஆலங்குளம்: ஆலங்குளம் ராஜீவ் நகரில் (பரும்பு) இருந்து ஐயனாா்குளத்திற்கு சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டது.
ஆலங்குளம் எம்.எல்.ஏ. பால் மனோஜ் பாண்டியன் கொடியசைத்து பேருந்து சேவையைத் தொடங்கிவைத்தாா். இந்த சிற்றுந்து மின்வாரிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம், காய்கனிச் சந்தை, நல்லூா் வழியாக ஐயனாா்குளம் வரை செல்லும்.
நிகழ்ச்சியில், பேரூராட்சித் துணைத் தலைவா் ஜான்ரவி, வாா்டு உறுப்பினா்கள் சுபாஸ் சந்திரபோஸ், சாலமன் ராஜா, வழக்குரைஞா் சாந்தகுமாா், நிா்வாகிகள் ராதா, முத்துராஜ், செந்தில், நிக்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.