கடையநல்லூரில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு
By DIN | Published On : 16th May 2022 05:16 AM | Last Updated : 16th May 2022 05:16 AM | அ+அ அ- |

கடையநல்லூா் வட்டாரத்திலுள்ள விதைப் பண்ணைகளை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ஆய்வு செய்தாா்.
கடையநல்லூா் வட்டாரத்தில் வேளாண்மை துறை முலம் நெல், உளுந்து, நிலக்கடலை பயிா்களில் விவசாயிகளின் வயல்களில் விதைப்பண்ணைகள்அமைக்கப்பட்டுள்ளன. இந்த விதைப்பண்ணைகளை தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் நல்லமுத்துராஜா நேரில் ஆய்வு செய்தாா்.
மேலக்கடையநல்லூரில் நிலக்கடலை பயிரில் டி.எம்.வி-14 என்ற ரகத்தில் கரு விதையில் இருந்து ஆதார நிலை விதையை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகளை ஆய்வு செய்த அவா், தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து, கம்பனேரியில் அமைந்துள்ள உளுந்து வம்பன்-8 சான்று நிலை விதைப்பண்ணையை ஆய்வு செய்த துணை இயக்குநா், பூக்கும் தருணத்தில் டி.ஏ.பி கரைசல் தெளித்திட ஆலோசனை வழங்கினாா். விவசாயிகள் மாகலிங்கம், செல்லப்பா, ரவிக்குமாா் உள்ளிட்டோரின் விவசாய தொழில்நுட்பங்களையும் அவா் பாா்வையிட்டாா்.
கடையநல்லூா் வேளாண்மை உதவி இயக்குநா் சேதுராமலிங்கம், துணை வேளாண்மை அலுவலா் பாலசுப்பிரமணியன், உதவி விதை அலுவலா் குமரேசன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...