ஊத்துமலை அருகே திருமணமாகி 2 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
ஊத்துமலை அருகேயுள்ள சீவலசமுத்திரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். இவா் தனது உறவினரின் மகள் மானிஷா(18) என்பவரை கடந்த மாா்ச் 13 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டாா்.
இந்த நிலையில் வயிறு வலி காரணமாக மானிஷா கடந்த 8 ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சுக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தென்காசி கோட்டாட்சியரின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.