சோலைசேரியில் அரசு மாணவியா் விடுதி திறப்பு
By DIN | Published On : 04th November 2022 03:41 AM | Last Updated : 04th November 2022 03:41 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே சோலைசேரியில் ஆதிதிராவிட மாணவியா் விடுதியை முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து விடுதியை ஆட்சியா் ப.ஆகாஷ் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.
சங்கரன்கோவில் அருகே சோலைசேரியில் அரசு ஆதிதிராவிட நலக் கல்லூரி மாணவியா் விடுதி 584.58 ச.மீ. பரப்பளவில் ரூ.126.09 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. விடுதியில் 75 மாணவிகள் தங்கும் வகையில் அறைகள், உணவுக்கூடம், சமையலறை, கழிப்பறை, சூரியஓளி மின்வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். அப்போது இந்த விடுதியில் தென்காசி ஆட்சியா் ப.ஆகாஷ், வாசுதேவநலலூா் எம்.எல்.ஏ. சதன்திருமலைக்குமாா் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா்.