தென்காசியில் செவ்வாய்க்கிழமை (நவ. 22) திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம், லோன் மேளா நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திகுறிப்பு.
இம்மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம், லோன் மேளா ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதில், உறுப்பினா் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.
அசல் ஆவணங்கள் இல்லையெனில் அவற்றை வழங்கவும், வங்கிக் கடன் உதவி, சுயவேலை வாய்ப்பு முகாம், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்குதல்,
இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளோருக்கு வீடு கட்டுவதற்கான திட்டம், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் திருநங்கைகள் விருப்பத்துக்கேற்ப திறன் பயிற்சியும் வழங்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.