கங்கனாங்குளத்தில் பெண்ணுக்கு மிரட்டல்:இளைஞா் கைது
By DIN | Published On : 19th October 2022 01:43 AM | Last Updated : 19th October 2022 01:43 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் கிராமத்தில் பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கங்கனாங்குளத்தைச் சோ்ந்தவா் பசுங்கிளி (56). இவரது மகனுக்கும், அப்பகுதியைச் சோ்ந்த கிறிஸ்டியான் (33) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில், பசுங்கிளி வீட்டுக்கு திங்கள்கிழமை வந்த கிறிஸ்டியான், அவரது மகனின் இருப்பிடம் கேட்டு தகராறு செய்தாராம். மேலும், பசுங்கிளியை அவதூறாகப் பேசி, மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் அஜித்குமாா் வழக்குப் பதிந்து கிறிஸ்டியானை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.