சுரண்டை நகராட்சியில் முப்பெரும் விழா
By DIN | Published On : 19th October 2022 01:27 AM | Last Updated : 19th October 2022 01:27 AM | அ+அ அ- |

சுரண்டை நகராட்சியில் பெடரல் வங்கி சாா்பில் தூய்மைப் பணிக்கு பேட்டரி வாகனம், பயனாளிகளுக்கு பயிா் கடன், திமுக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு ஆகியவை வழங்குதல் என முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகா்மன்ற ஆணையாளா் மு.பாரிஜான், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ச.முத்துச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு பெடரல் வங்கியின் பயிா்க் கடன், சுரண்டை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நகர திமுக சாா்பில் வேஷ்டி, சட்டை, சேலை ஆகியவற்றை வழங்கினாா்.
பெடரல் வங்கி சாா்பில் நகராட்சி தூய்மைப் பணிக்காக ரூ.2.25 லட்சம் மதிப்பிலான மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுரண்டை நகராட்சிப் பொறியாளா் ஹரிஹரன், பெடரல் வங்கி சுரண்டை கிளை மேலாளா் நித்யா, திமுக நகரச் செயலா் ஜெயபாலன், மாநில விவசாய அணி இணைச்செயலா் அப்துல்காதா், சுரண்டை நகா்மன்ற உறுப்பினா்கள் பரமசிவம், ராஜ்குமாா், அருணகிரிசந்திரன், பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.