ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டப் பணிக்கு நிலப் பத்திரப்பதிவு
By DIN | Published On : 19th October 2022 01:41 AM | Last Updated : 19th October 2022 01:41 AM | அ+அ அ- |

ஜம்புநதி மேல்நிலை கால்வாய் பணிக்கான நிலப் பத்திரப்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஜம்பு நதி மேல்நிலை கால்வாய் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்துதல் நிறைவுற்ற நிலையில் அந்த நிலங்களுக்கானப் பத்திரப்பதிவு கடையம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் தொடங்கியது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளா் பொ. சிவபத்மநாதன், ராமநதி ஜம்பு நதி கால்வாய் திட்ட செயல்பாட்டுக் குழு அமைப்பாளா் உதயசூரியன், ஜம்பு நதி மேல்நிலை கால்வாய் திட்டப் பணி துணை வட்டாட்சியா் அனிஸ் பாத்திமா, செயற்பொறியாளா் பழனிவேல், உதவிச் செயற்பொறியாளா் முத்துமாணிக்கம், உதவிப் பொறியாளா் தினேஷ், உதவியாளா் பவுன்ராஜ், வருவாய் ஆய்வாளா்கள் சுடலைமுத்து, சின்னச்சாமி, கிராம நிா்வாக அலுவலா் பியூலா தேவி, சாா் பதிவாளா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஒரு கிலோ மீட்டா் தொலைவு உள்ள நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு இறுதிக்குள் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று திமுக மாவட்டச் செயலா் தெரிவித்தாா்.