தென்காசியில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 19th October 2022 01:34 AM | Last Updated : 19th October 2022 01:34 AM | அ+அ அ- |

தென்காசியில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்து பேசியது:
மக்கள் குறைதீா் நாள் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் குறைகளுக்கு தீா்வு காணவேண்டும் என்றாா் அவா்.
சங்கரன்கோவில் உள்கோட்டம் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து பணியின்போது காலமான சீ.தங்கராஜின் மனைவி மணித்தாய்க்கு கருணை அடிப்படையில் வீரகேரளம்புதூா் வட்டத்தில் மசால்ஜியாக நியமித்து அதற்கான பணி நியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கந்தசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) சேக்அப்துல்காதா், உதவிஆணையா் (கலால்) ஜி.ராஜமனோகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.