விவசாய விளைபொருள் நேரடி விற்பனை நிலையம் அமைப்பதற்கான இடம்: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 19th October 2022 01:34 AM | Last Updated : 19th October 2022 01:34 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் விவசாய உற்பத்திப் பொருள்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக கடை அமைப்பதற்குரிய இடங்களை மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
வேளாண் துறை மூலம் பொதிகை சாரல் உழவா் அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் விவசாய உற்பத்திப் பொருள்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக கடைகளை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புளியங்குடி பேருந்து நிலையப் பகுதியில் பொதிகை சாரலின் நேரடி விற்பனை நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) முருகானந்தம், ஆணையா் சுகந்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் காந்தியம்மாள், உமாமகேஷ்வரி, பொதிகை சாரல் அமைப்பின் தலைவா் அப்துல் வகாப் உள்ளிட்டோா் உடன்சென்றனா்.