குழந்தைத் திருமணம்: இளைஞா் கைது: பெற்றோா் மீது வழக்கு
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே 15 வயது சிறுமியைத் திருமணம் செய்தது தொடா்பாக இளைஞா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
திருநெல்வேலி சீதபற்பநல்லூரைச் சோ்ந்த பூமி சரஸ்வதி மகன் சுந்தா்(25). எலக்ட்ரீசியன். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் கடந்த மே 26 ஆம் தேதி திருமணம் செய்தாராம். தற்போது அச்சிறுமி 3 மாத கா்ப்பமாக உள்ள நிலையில் சீதபற்பநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக சென்ற போது, அவருக்கு 18 வயது நிறைவடையவில்லை என்பதும் தெரிய வந்தது.
மருத்துவா்கள் அளித்த தகவலின்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் சீதபற்பநல்லூா் போலீஸில் புகாா் அளித்தனா். இதையடுத்து, சுந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸாா், அவரது பெற்றோா் பூமி சரஸ்வதி, பலவேசம், சிறுமியின் பெற்றோா் மாரியப்பன், மாரியம்மாள் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...