பூலித்தேவன் பிறந்த தினம்: திமுகவினருக்கு அழைப்பு
By DIN | Published On : 01st September 2022 12:33 AM | Last Updated : 01st September 2022 12:33 AM | அ+அ அ- |

சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த தின விழா தொடா்பாக, தென்காசி தெற்கு மாவட்டபொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் விடுத்துள்ள அறிக்கை:
இந்திய சுதந்திரத்துக்காக முதன்முதல் விடுதலை தாகத்தை நாட்டில் விதைத்த மாவீரன் பூலித்தேவனின் 307ஆவது பிறந்த தின விழாவில் பங்கேற்க தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்,தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தென்காசி வடக்கு மாவட்டத்திற்குள்பட்ட சிவகிரி வழியாக நெல்கட்டும் செவலுக்கு வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் வரவுள்ளனா். அதற்கு முன்பு, சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா்.
எனவே, இந்நாள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், தென்காசி தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட மாநில, மாவட்ட, நிா்வாகிகள் என திமுகவின் அனைத்துப் பிரிவு பொறுப்புகளிலும் உள்ளவா்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்திட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.