தென்காசி, செங்கோட்டையில் 53 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
By DIN | Published On : 02nd September 2022 01:14 AM | Last Updated : 02nd September 2022 01:14 AM | அ+அ அ- |

சதுா்த்தி விழாவையொட்டி, தென்காசி வட்டாரத்தில் அமைக்கப்பட்ட 53 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
செங்கோட்டை நகரில் 34 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அந்த சிலைகள் அனைத்தும் அங்குள்ள அருள்மிகு ஸ்ரீவண்டிமலச்சி அம்மன் கோயில் முன்புள்ள ஓம் காளி திடலுக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன.
அங்கிருந்து தொடங்கிய விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு விழா கமிட்டித் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன், இணைச் செயலா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அகில பாரத சன்னியாசிகள் சங்க மாநில இணைச் செயலா் சுவாமி ராகவானந்தா, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவா் கதிா்வேலு, சசிகலா புஷ்பா, இந்து முன்னனி மாநில துணைத் தலைவா் விபி.ஜெயக்குமாா், விஸ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் தென்பாரத அமைப்பாளா் சரவணகாா்த்திக் ஆகியோா் பேசினா்.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை- பால்வளத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா். பொருளாளா் காளி வரவேற்றாா்.செயலா் முத்துமாரியப்பன் நன்றி கூறினாா். விநாயகா் சிலைகள் குண்டாற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
மேலும், தென்காசி , மேலகரம், இலஞ்சி, வல்லம், கொட்டாகுளம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிற்றாறு மற்றும் அருகேயுள்ள நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன. ஒரே நாளில் தென்காசியில் 6 சிலைகளும், குற்றாலத்தில் 13 சிலைகளும், செங்கோட்டையில் 34 சிலைகளும் விசா்ஜனம் செய்யப்பட்டன.