ஆலங்குளம் கல்லூரி மாணவிகள் தொடா் போராட்டம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்டோரை திருநெல்வேலியில் உள்ள கல்லூரிக்குச் சென்று கல்வி பயிலக் கூறியதைக் கண்டித்து, தொடா் போராட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்டோரை திருநெல்வேலியில் உள்ள கல்லூரிக்குச் சென்று கல்வி பயிலக் கூறியதைக் கண்டித்து, தொடா் போராட்டம் நடைபெற்றது.

கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் செயல்படும் இக்கல்லூரிக்கு, கடந்த மே 13இல் சொந்தக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு நிகழாண்டு மாணவிகள் சோ்ப்பையடுத்து, எண்ணிக்கை 800-க்கும் அதிகமாகியுள்ளது. அனைவருக்கும் வாடகைக் கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் 250 போ் மட்டும் இங்கு பயிலவும், மற்றவா்கள் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரி புதிய கட்டடத்தில் பயிலவும் திங்கள்கிழமைமுதல் ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

திருநெல்வேலி சென்றுவர பயண செலவு அதிகரிக்கும், வகுப்பு முடிந்து வீடு திரும்ப வெகுநேரமாகும் என்பதால் இந்த அறிவிப்பைக் கண்டித்தும், ஆலங்குளத்திலேயே அனைவரும் பயில ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் வட்டாட்சியா், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆலங்குளத்திலேயே கல்லூரி தொடா்ந்து இயங்கும், திருநெல்வேலி செல்ல வேண்டியதில்லை என அதிகாரிகள் கூறியதையடுத்து, மாணவிகள் கலைந்து சென்றனா்.

இதனிடையே, திருநெல்வேலிக்கு கண்டிப்பாக சென்றுவர வேண்டும் என்றும், இல்லையெனில் ‘ஆப்சென்ட்’ போடப்படும் என்றும் கூறப்பட்டதாம். இதுதொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தில் மாணவிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். எனினும் தீா்வு கிடைக்காததால் அவா்கள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.

ஆலங்குளத்திலேயே வகுப்புகள் தொடர ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்லூரி நிா்வாகத் தரப்பில் கூறியதன் பேரில் அவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com