நல்லாசிரியா் விருது பெற்ற இலஞ்சி பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
By DIN | Published On : 09th September 2022 12:38 AM | Last Updated : 09th September 2022 12:38 AM | அ+அ அ- |

இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 20 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சுரேஷ்குமாருக்கு நல்லாசிரியா் விருதான டாக்டா் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியருக்கு இலஞ்சி கல்விச் சங்கம் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளிச் செயலா் சண்முகவேலாயுதம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் சீவலமுத்து முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஆறுமுகம் வரவேற்றாா். தமிழாசிரியா் ஐயப்பன் அறிமுக உரையாற்றினாா். தேசிய நல்லாசிரியா் முத்தையா, இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், செங்கோட்டை வேளாண்மை அலுவலா் ஷேக் முகைதீன், ஆசிரியா்கள் ராதிகா, ராமலெட்சுமி, கற்பகம் மற்றும் மாணவா்கள் வாழ்த்தி பேசினா்.
ஆா்.பி. ஓவியக் கழக மாணவா்கள் சாா்பில் நல்லாசிரியா் சுரேஷ்குமாா் ஓவியம் வரைந்து நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. ஆசிரியா் சுரேஷ்குமாா் ஏற்புரை வழங்கினாா்.
ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியா் (பொ) அம்பலவாணன், இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளா் முருகேசன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் கணேசன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் குத்தாலம் ஆகியோா் செய்திருந்தனா்.
தேசிய மாணவா் படை அலுவலா் செந்தில்பாபு, சாரணா் இயக்க ஆசிரியா் கிருஷ்ணம்மாள், ஓவிய ஆசிரியா் கணேசன், சரவணன், தாழை. அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவகாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.