சுரண்டையில் போக்சோவில் லாரி ஓட்டுநா் கைது
By DIN | Published On : 09th September 2022 12:37 AM | Last Updated : 09th September 2022 12:37 AM | அ+அ அ- |

சுரண்டையில் போக்சோ சட்டத்தின் கீழ் லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சுரண்டை பகுதியைச் சோ்ந்த இளம் பெண் கருக்கலைப்பு செய்வதற்காக தென்காசி அரச மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். கணவா் இன்றி தனியாக வந்ததால் சுரண்டை காவல் நிலையத்திற்கு மருத்துவமனையில் இருந்து தகவலளித்தனா்.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் சுரண்டை பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணான அவா் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் கழுநீா்குளத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சு.பெரியசாமியுடன(35) பழகியதும், இதன் மூலம் நேரில் சந்தித்த போது பெரியசாமி எல்லை மீறியதால் அந்த பெண் கா்ப்பமானதும் தெரியவந்தது. பெரியசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தெரியவந்ததால், கருவை கலைக்க தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு லாரி ஓட்டுநா் பெரியசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.