பாவூா்சத்திரம் பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம்
By DIN | Published On : 09th September 2022 12:42 AM | Last Updated : 09th September 2022 12:42 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் பகுதி பள்ளிகளில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெத்தநாடாா்பட்டி ஜீவா நா்சரி-பிரைமரி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா்சௌ. ராதா தலைமை வகித்தாா். மாணவா்-மாணவியா் கொண்டுவந்த பூக்களால் அத்தப்பூ கோலமிட்டனா். ஓணம் பண்டிகை குறித்து பள்ளி முதல்வா் கவிதா சாமுவேல் பேசினாா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள், மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.
ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவி வா்ஷா ஓணம் பண்டிகை குறித்து பேசினாா். மாணவி பேபி ஜெனிகா ஓணம் குறித்த விநாடி-வினா நிகழ்ச்சியை மாணவா்களுக்கு நடத்தினாா். மாணவியா் ஆதிலா, ஜெப்ரீன் ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் தலைமையில் ஆசிரியா்கள், ஊழியா்கள் செய்தனா்.