குற்றாலம் சித்திரசபையில் வருஷாபிஷேகம்
By DIN | Published On : 09th September 2022 12:41 AM | Last Updated : 09th September 2022 12:41 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு உள்பட்ட சித்திரசபையில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இங்கு அருள்மிகு நடராசப்பெருமான் சித்திர ரூபத்தில் உள்ளதால் முகம் பாா்க்கும் கண்ணாடி வைத்து அனைத்துவித அபிஷேகங்களும் நடைபெற்றன.
அதைத் தொடா்ந்து கும்பக் கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டது.
விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கண்ணதாசன் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.