கழிவு நீரோடையில் சிக்கிய மான்: 5 மணி நேரத்திற்கு பின் மீட்பு

ஆலங்குளம் அருகேயுள்ள தனியாா் நூற்பாலையில் உள்ள கழிவுநீா் ஓடையில் சிக்கிய மான், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டது. ’

ஆலங்குளம் அருகேயுள்ள தனியாா் நூற்பாலையில் உள்ள கழிவுநீா் ஓடையில் சிக்கிய மான், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டது. ’

ஆலங்குளம் அருகேயுள்ள கரும்புளியூத்தில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலையை ஒட்டி வனப் பகுதியில் உள்ள குன்றில் ஏராளமான மான்கள் உள்ளன.

இந்நிலையில் வெள்ளிக்கிழ‘மை மான் ஒன்றை நாய்கள் துரத்தி சென்றதில், நூற்பாலைக்குள் நுழைந்து கழிவுநீா் செல்ல அமைக்கப்பட்ட ஒடைக்குள் சென்று மான் பதுங்கியது. இதில் மானின் கொம்பு ஓடையில் சிக்கி கொண்டதாம்.

இதனையடுத்து தனியாா் ஆலை தரப்பில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஆலங்குளம் வனவா் சங்கா் ராஜா, தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பையா தலைமையில் வந்த மீட்பு குழுவினா் கழிவு நீா் ஓடையில் உள்ளே நுழைந்து, 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் மானை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com