அரசுப் பள்ளி அமைக்க கோரி போராட்டம்: கிராமத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் கிராமத்தில் அரசுப் பள்ளி அமைக்கக் கோரி தொடா் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களிடம் தென்காசி கோட்டாட்சியா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்
அரசுப் பள்ளி அமைக்க கோரி போராட்டம்: கிராமத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் கிராமத்தில் அரசுப் பள்ளி அமைக்கக் கோரி தொடா் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களிடம் தென்காசி கோட்டாட்சியா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இக் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்துவ ஆலயம் கட்டுவதில் இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இதில் ஒருதரப்பினா், அந்த ஆலய நிா்வாகத்தின்கீழ் செயல்படும் பள்ளியில் படித்த தங்களது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை ஒட்டுமொத்தமாகப் பெற்று, தங்களுக்குச் சொந்தமான கோயிலில் பாடம் நடத்தி வருகின்றனா்.

மேலும், அரசுப் பள்ளி அமைக்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, ஆலங்குளம் டிஎஸ்பி பா்னபாஸ், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, கல்வித்துறை அதிகாரிகள் அருளானந்தம், முத்தையா, லோகநாதன் ஆகியோா் கிராமத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மாணவா்களின் நலன் கருதி அருகேயுள்ள ஏதாவது ஒரு பள்ளியில் சோ்க்கும்படி அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் இதை கிராமத்தினா் ஏற்க மறுத்துவிட்டனா். இதனால் பேச்சுவாா்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

கிராம நிா்வாக அலுவலா் அந்தோணிராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் வெள்ளத்துரை, கிராம கமிட்டி நிா்வாகிகள் தாராசிங், ராஜேந்திரன், விஜயன் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com