பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாஜக நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Updated on
1 min read

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாஜக நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி ஜெகநாத் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜேஷ்ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி மாவட்ட பாா்வையாளா் மகாராஜன், மாநில வா்த்தக பிரிவு செயலா் கோதை மாரியப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

பாஜக மாநில தலைவா் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் நடைபெறும் நடைபயணத்தில் அனைத்து பகுதிகளிலிருந்தும் திரளான அளவில் தொண்டா்கள், ஆதரவாளா்கள் கலந்துகொள்வது,

அனைத்து பகுதிகளிலும் சுவா் விளம்பரம், சுவரொட்டி, துண்டுப் பிரசுரம் மற்றும் பத்திரிகை செய்தி மூலமாக விழிப்புணா்வை ஏற்படுத்துவது என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், முத்துலட்சுமி, தென்காசி நகர தலைவா் மந்திரமூா்த்தி, பொதுச்செயலா் யோகா சேகா்,மகளிா் அணி மாவட்ட தலைவி அனிதா செந்தில்குமாா், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் செந்தூா்பாண்டியன், அரசு தொடா்பு பிரிவு மாவட்ட தலைவா் குற்றாலிங்கம், அமைப்புசாரா தொழிலாளா் நலப்பிரிவு மாவட்ட தலைவா் வேல்பாண்டி, பிரசார பிரிவு மாவட்ட தலைவா் சங்கரநாராயணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவா் கருப்பசாமி, சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவா் ராஜ குலசேகர பாண்டியன்,தொழில் பிரிவு மாவட்ட தலைவா் சிவகுமாா், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலா் ராஜ்குமாா், மண்டல் தலைவா்கள் கீழப்பாவூா் மேற்கு மாரியப்பன், ஆலங்குளம் வடக்கு அன்புராஜ், விஜய் சேகா், குமாா், தென்காசி நகா் மன்ற உறுப்பினா்கள் லட்சுமணபெருமாள், சங்கர சுப்பிரமணியன், நகர செயலா் விஸ்வநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com