கடையநல்லூா் நகராட்சி பகுதியில், தெருக்களில் திரிந்த பன்றிகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து அப்புறப்படுத்தினா்.
கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித்திரிவதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதைத் தொடா்ந்து, தெருக்களில் பன்றிகள் சுற்றித் திரிவதை தவிா்க்க வேண்டும் என உரிமையாளா்களுக்கு நகராட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் தெருக்களில் பன்றிகள் சுற்றித் திரிந்தனவாம். இதையடுத்து நகராட்சி ஆணையா் சுகந்தி ஆலோசனையின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா், சுகாதாரஆய்வாளா்கள் சிவா, சக்திவேல் ஆகியோா் மேற்பாா்வையில் மதுரையை சோ்ந்த குழுவினா் தெருவில் திரிந்த 40 பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.