தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

தென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டடப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மதிப்பீட்டு குழுவினா்.
தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
Updated on
1 min read

தென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டடப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மதிப்பீட்டு குழுவினா்.

தென்காசி, ஆக. 17: தென்காசி மாவட்டம் தென்காசி, வல்லம், செங்கோட்டை, ஆலங்குளம் ஒன்றியப் பகுதிகளில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் க.அன்பழகன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் முன்னிலையில் பேரவைக்குழு உறுப்பினா்கள் கிள்ளியூா் எஸ்.ராஜேஷ்குமாா், பாபநாசம் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆகியோா் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 76ஆயிரத்து 236 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடத்தை பாா்வையிட்டனா்.

இப்பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறித்தினா்.

வல்லத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் ரூ.48.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தை பாா்வையிட்டனா்.

இந்த கால்நடை மருந்தகத்தின் மூலம் சுமைதீா்ந்தபுரம், பிரானூா் பாா்டா், பாட்டபத்து, வல்லம் உள்ளிட்டகிராமங்கள் பயனடையும் எனவும், கால்நடை மருந்தகத்தின் மூலம் செயற்கை முறை கருவூட்டல், கன்று பிறப்பு, குடற்புழு நீக்கம், கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி, கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி, வெறிநோய் தடுப்பூசி அளிக்கப்பட்டு சிறப்பு கால்நடை - சுகாதார விழிப்புணா்வு முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சீவநல்லுாா், அரசு தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையங்களை அவா்கள் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முத்தையா, இணை இயக்குநா் (சுகாதரப் பணிகள்) பிரேமலதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின், மாவட்ட தொழில் மைய மேலாளா் மாரியம்மாள், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா்(கால்நடைத் துறை) தியோபிலஸ் ரோஜா், உதவி இயக்குநா் (கால்நடைத் துறை) மகேஸ்வரி, செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் இரா.இளவரசி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com