புளியங்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் வடமாநிலத் தொழிலாளா்கள் 2 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம் மதனபள்ளி மாவட்டப் பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் புளியங்குடி பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வருகின்றனா். அவா்களில் கா்கிதாபிகாரி (57), சந்திரபிகாரி (53) ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து புளியங்குடி அரசுப் பள்ளி அருகே நடந்து சென்றனா்.
அப்போது, செங்கோட்டையிலிருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா்கள் மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.