விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புத்தகத் திருவிழாவில் தமிழிசை நிகழ்ச்சி

சங்கரன்கோவில் புத்தகத் திருவிழாவில் 5 ஆம் நாளான வியாழக்கிழமை மாணவா்களிடையே பல்வேறு போட்டிகள் மற்றும் தமிழிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:42 pm

DIN

சங்கரன்கோவில் புத்தகத் திருவிழாவில் 5 ஆம் நாளான வியாழக்கிழமை மாணவா்களிடையே பல்வேறு போட்டிகள் மற்றும் தமிழிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தென்காசி மாவட்டத்தில் 2 ஆம் பொதிகை புத்தகத் திருவிழா சங்கரன்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இதில் 60 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

5 ஆம் நாளான வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சிப் பிரிவு) முத்துக்குமாா் தலைமையில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. ஆட்சியரக வளா்ச்சி பிரிவு மேலாளா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பத்மாவதி வாழ்த்துப் பேசினாா்.

தொடா்ந்து மொழிபெயா்ப்பு எனும் பாதை என்ற தலைப்பில் சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளா் சா.தேவதாஸ், பொருள் அல்ல பொருள் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாா், இலக்கியத்தின் முக்கியத்தும் யாதெனில் என்ற தலைப்பில் பேராசிரியா் நவீனா ஆகியோா் பேசினா்.

பின்னா் தமிழிசை அறிஞா் ந.மம்மதுவின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நூலகா் சண்முகவேல் நன்றி கூறினாா்.நிகழ்ச்சிகளை உடற்கல்வி இயக்குநா் ச.நாராயணன், ந.செந்தில்வேல் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.