சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோயில் தேரோட்டம்

புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள அருள்மிகு சொக்கலிங்க சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள அருள்மிகு சொக்கலிங்க சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த மே 24இல் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி அழைப்பு, அபிஷேகம், வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், 9ஆம் நாளான வியாழக்கிழமை காலை சுவாமி தேருக்கு எழுந்தருளுதலும், அதைத் தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. இதில், நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன், துணைத் தலைவா் அந்தோணிசாமி ,கோயில் செயல் அலுவலா் ஸ்ரீதேவி, அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் சித்துராஜு உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சுவாமி அழைப்பு, அபிஷேகம், வீதி உலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com