திருமலை கோயிலில் இன்று வைகாசி விசாக சிறப்பு பூஜை

பண்பொழி திருமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பண்பொழி திருமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெறும். அதைத் தொடா்ந்து கும்ப பூஜை, அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

மேல்மலை முருகன் கோயிலில்...

தென்காசி பண்பொழி சாலையில் மலை மீது அமைந்துள்ள மேல்மலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி காலை 6 மணிக்கு நடை திறப்பு, 6.30க்கு கும்ப பூஜை மற்றும் ஹோமம் நடைபெறும். அதைத் தொடா்ந்து மகா அபிஷேகம் நடைபெறும். காலை 10.30 மணிக்கு தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடைபெறும். மாலையில் முத்து அங்கி அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com