கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பகவத் பிராா்த்தனை, அனுக்ஞை, விஷ்வக்ஷேன ஆராதனை, புன்யாஹவாசனம், மூலமந்திர ஹோமம், ஸ்ரீபுருஷ ஸூக்த ஹோமம், ஸ்ரீமஹா விஷ்ணு ஸூக்த ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் ஆகியனவும், தொடா்ந்து ஸ்ரீஅலா்மேலு மங்கை பத்மாவதி சமேத பிரசன்ன வேங்கடாசலபதி மற்றும் ஸ்ரீநரசிம்ம பெருமாளுக்கு விஷேச அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
மேலும் இக்கோயிலில் வியாழக்கிழமை மாலை சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.