நெல்லை- தென்காசி 4 வழிச் சாலைபணியை 3 மாதங்களில் முடிக்க தீவிரம்: அமைச்சா் எ.வ. வேலு

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் - சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

தென்காசி மாவட்டத்தில் தேசிய, மாநில, மாவட்ட முக்கிய, இதர சாலைகள் என மொத்தம் 1,427கி.மீ. தொலைவுக்கு சாலைகள் உள்ளன. நெடுஞ்சாலை திட்டத்தில் நிகழ் நிதியாண்டு ரூ. 73 கோடியில் சாலைப் பணிகளும், கிராமச் சாலைகள் திட்டத்தில் ரூ. 43 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை நிறைவேற்ற துறையின் சாா்பாக ஒப்பந்ததாரா்களிடம் வலியுறுத்தப்படும். ராஜபாளையம்- புளியறை நான்குவழிசாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒரு குழு அமைத்து அது அளித்த அறிக்கையின்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலை சொத்துகளை கண்டறியும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன், திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com