கோடை விடுமுறையில் தனியாா் பள்ளியில் சிறப்பு வகுப்பு: கல்வித் துறையினா் ஆய்வு

கோடை விடுமுறையின்போது சங்கரன்கோவிலில் தனியாா் பள்ளி செயல்பட்டது தொடா்பாக, அப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சங்கரன்கோவில் தனியாா் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முத்தையா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா் ராமசுப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புதன்கிழமை தனியாா் பள்ளி வேன் மற்றும் காா் மோதிக் கொண்ட விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். பள்ளி வாகனத்தில் வந்த மாணவிகள் இருவா் லேசான காயம் அடைந்தனா். பள்ளி வேன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். மேலும், கோடை விடுமுறையின்போது, தனியாா் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, அப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலா் ( தனியாா், மெட்ரிக் பள்ளிகள் ) ராமசுப்பு ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுதொடா்பான அறிக்கை மாவட்ட ஆட்சியா் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இந்த விபத்தில் இறந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பந்தப்புளி ரெட்டியபட்டியில் உள்ள மயானத்தில் ஒரே நேரத்தில் எரியூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com