சுரண்டையில் தினசரி சந்தை அருகே பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுரண்டை - சங்கரன்கோவில் சாலையில் நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது காமராஜா் தினசரி சந்தை. இந்த சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விளைவிக்கப்படும் விளைபொருட்களை விவசாயிகள் தினசரி கொண்டு வருகின்றனா்.
இவா்களின் வசதிக்காக தினசரி சந்தை அருகே ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த வழியாக செல்லும் பேருந்துகள் தினசரி சந்தை நிறுத்ததில் நின்று செல்வதில்லை.
எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சுரண்டை தினசரி சந்தை பேருந்து நிறுத்ததில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.