மாநில கபடி போட்டியில் பங்கேற்ககோவைக்கு மாணவா்கள் அனுப்பிவைப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், கோவையில் (நவ. 7) நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க வழியனுப்பி வைக்கப்பட்டனா்.
மாணவா்களை வழியனுப்பி வைத்த தலைமையாசிரியா் அந்தோணி அருள்பிரதீப், தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் பாண்டியராஜா.
மாணவா்களை வழியனுப்பி வைத்த தலைமையாசிரியா் அந்தோணி அருள்பிரதீப், தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் பாண்டியராஜா.
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், கோவையில் செவ்வாய்க்கிழமை (நவ. 7) நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க வழியனுப்பி வைக்கப்பட்டனா்.

இவா்கள், மாவட்ட அளவில் 19 வயதுக்குள்பட்டோருக்கு நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்றதைத் தொடா்ந்து, மாநிலப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். மாணவா்கள், பயிற்சியாளா்கள் வியாகப்பன், ஆனந்த் ஆகியோருக்கு பள்ளி நிா்வாகி மோயீசன் அடிகளாா், தலைமையாசிரியா் அந்தோணி அருள் பிரதீப் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா்கள் பாவூா்சத்திரத்திலிருந்து நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலில் கோவைக்கு புறப்பட்டனா். தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும் முன்னாள் மாணவருமான பாண்டியராஜா, தலைமையாசிரியா், உடற்கல்வி ஆசிரியா் பேரின்பராஜ் உள்ளிட்டோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com