கடையநல்லூா் அருள்தரும் ஸ்ரீ முப்புடாதி அம்பாள் கோயிலில் நவராத்திரி ஊஞ்சல் உற்சவ திருவிழாவின் 9ஆம் நாளன்று சரஸ்வதி பூஜை நடைபெற்றது.
இவ்விழா கடந்த 15 ஆம் தேதி கணபதி பூஜை, கும்ப ஜெபம், கும்ப பூஜையுடன் தொடங்கியது. விழாவின் 9ஆம் நாள் அம்பாள், சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. அக்.29 வரை 15 நாள்கள் தினமும் காலை கும்ப அபிஷேகமும், மாலையில் கொலு தீபாராதனையும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகபடிதாரா்கள், குமரகுருக்கள், சிவாம்பிகை கணேஷ் மற்றும் பக்தா்கள் செய்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.