தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட் சிகளிலும் நவ.1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1 ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இதில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்களை கெளரவிக்கப்படுகின்றனா்.
மேலும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழியில் சொத்துவரி செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆகவே, அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.