கழுதுருட்டியில் திமுக பொதுக்கூட்டம்
By DIN | Published On : 18th April 2023 04:21 AM | Last Updated : 18th April 2023 04:21 AM | அ+அ அ- |

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திமுக கொடியேற்று விழா, நலஉதவி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கேரள மாநிலம் கழுதுருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆரியங்காவு ஊராட்சி கழுதுருட்டியில் நடைபெற்ற விழாவுக்கு கேரள மாநில அமைப்பாளா் முருகேசன் தலைமை வகித்தாா்.
கொல்லம் மாவட்டச் செயலா் ரெஜுராஜ், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன், மாநிலப் பேச்சாளா் தூத்துக்குடி சரத்பாலா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். 500 பேருக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, ஆரியங்காவு ஊராட்சி திமுக அலுவலகத்தை பொ. சிவபத்மநாதன் திறந்துவைத்து, கட்சிக் கொடியேற்றினாா். ஆரியங்காவு முன்னாள் ஊராட்சித் தலைவா் மாம்பலத்துறை சலீம், தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலா் கனிமொழி, பொதுக்குழு உறுப்பினா்கள் சாமிதுரை, ரஹீம், தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், அழகுசுந்தரம், திவான் ஒலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.