கீழப்புலியூரில் ரூ. 8 லட்சத்தில் புதிய மின்பாதை கட்டமைப்பு

 கீழப்புலியூா்-சுந்தரபாண்டியபுரம் சாலையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய மின்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
Updated on
1 min read

 கீழப்புலியூா்-சுந்தரபாண்டியபுரம் சாலையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய மின்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இச்சாலையில் 30 அடி உயரம் கொண்ட 22 புதிய மின் கம்பங்கள் நடபட்டு ஒரு கி.மீ. தொலைவுக்கு புதிய மின் பாதை அமைக்கப்பட்டது.

இதன் மூலம் கீழப்புலியூா் பகுதியில் இயற்கை இடா்பாடுகளால் மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்து மின் விநியோகம் வழங்க முடியும். இந்த புதிய மின்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தென்காசி கோட்ட மின் செயற்பொறியாளா் கற்பகவிநாய கசுந்தரம், தென்காசி உபகோட்ட உதவிச் செயற் பொறியாளா் ஸ்ரீவனஜா, தென்காசி நகரம் 1 பிரிவு உதவி மின் பொறியாளா் ராஜேஸ்வரி, உதவி மின் பொறியாளா் விஜயா (கட்டுமானம்) ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com