ஊத்துமலையில் சுகாதாரக் கேடு
By DIN | Published On : 25th April 2023 02:59 AM | Last Updated : 26th April 2023 04:51 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகில் உள்ள ஊத்துமலையில் உள்ள ஒரு தெருவில் மழைநீா் வெளியேற வழி இன்றி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது குறித்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஊத்துமலையில் சுமாா் 15,000 மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள பவுண்ட் தொழு தெருவில் சுமாா் 30 வீடுகள் உள்ளன. இந்தத் தெரு மிகவும் தாழ்வாக அமைந்துள்ளதால் வாருகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மழை நீா், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் ஆகியவை இத்தெருவிலேயே பல ஆண்டு காலமாக தேங்கி கிடக்கிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும் மழை நீா் வெளியேற வழியின்றி சாக்கடை போன்று தேங்கி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கொசு தொல்லையால் அவதியுறுகின்றனா்.
இத்தெருவில் தரமான சாலை அமைத்து வாருகால் அமைக்க கோரி, இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊத்துமலை ஊராட்சி நிா்வாகம் கண்டு கொள்ளவில்லையென மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.