ஏப்.26, 27 இல் தென்னை பயிா் பாதுகாப்பு சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் ஏப்.26, 27 ஆம் தேதிகளில், தென்னை பயிா் பாதுகாப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் ஏப்.26, 27 ஆம் தேதிகளில், தென்னை பயிா் பாதுகாப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திகுறிப்பு:

சமீப காலமாக தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல், வோ்வாடல் நோய் காணப்படுகிறது. இதுபோன்ற பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் தொடா்பாக விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த ஏப் 26, 27 ஆம் தேதிகளில்

அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

வேளாண்மை, தோட்டக்கலை துறை அலுவலா்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தேவைப்படும் இடங்களில் களஆய்வு மேற்கொண்டு உரிய பரிந்துரைகளை வழங்குவா்.

மேலும், தென்னை சாகுபடியில் உள்ள நவீன தொழல்நுட்பங்கள் குறித்து விளக்குதல், முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து செயல் விளக்கம், முக்கிய பூச்சி, நோய்களின் அடையாளம், சேதத்தின் அறிகுறிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துதல், ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு காரணிகள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை , தோட்டக்கலைத் துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com