தென்காசி மாவட்டம் இலஞ்சியில் கேலோ இந்தியா விளையாட்டு மையத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஈ. ராஜா எம்எல்ஏ பயிற்சி மையத்தைத் தொடக்கிவைத்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதியுதவியுடன் தொடக்க நிலை பளு தூக்குதல் பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது. இம்மையத்தில் 30 முதல் 100 பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, நாள்தோறும் காலை, மாலையில் சிறந்த பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் இம்மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்- மாணவிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலா் வினு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.