

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வே.ஜெயபாலனுக்கு சுரண்டையில் அக்கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று ஊருக்கு திரும்பிய அவருக்கு, திமுகவினா் திரளாக வந்து வரவேற்பு அளித்தனா். பின்னா், அங்குள்ள அண்ணா, காமராஜா் சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பழகன், ரவிசங்கா், அழகுசுந்தரம், நிா்வாகிகள் முத்துக்குமாா், முத்து, ஆறுமுகச்சாமி, ராமசாமி, கணேசன், சுரண்டை நகா்மன்ற உறுப்பினா்கள் பரமசிவம், அந்தோணி சுதா, கல்பனா, சிவசண்முக ஞானலட்சுமி, செல்வி, அம்சா பேகம், சபா்நிஷா, சுசிலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.